அவமரியாதை செய்தவர்களும் 'அம்மா' என்றழ,
நீ வீழ மாட்டாயா என எதிர்நோக்கிய கண்களும்-
நேற்று நீ மீண்டெழ மாட்டாயா என ஏங்க,
'ஆணவம்' எனும் அடைமொழி இன்று 'இரும்பு மனம்' என மாறிட,
வெற்றிடமாய்ப்போன, பலர் உணர்ந்திராத நீ இருந்த இடம்
அனைவர் மனதிலும் உறுத்திக்கொண்டிருக்க,
போற்றத்தக்க பரிமாணங்கள்;
அதிரவைக்கும் அச்சமின்மை;
வியப்பூட்டும் நாவன்மை;
எழில்மிகு தனித்தன்மை;
அசைக்கவல்ல அமைவடக்கம் - என
உன்னை பார்த்தபோதெல்லாம் உள்ளூக்கம் பெற்ற நான் -
உதவிய நல்லுள்ளத்தை ஏளனம் செய்து,
இன்று அதையே உயர்த்திப்பேசும் இரட்டை தரங்களையும்,
மறைந்தபின் புகழாரம் சூட்டும் நிலையற்ற மாந்தரையும்
முதல் முறை உற்றுநோக்கியபின் உணர்ந்தேன் -
உன் உறக்கமே அமைதி நிறைந்தது என!
2 comments:
அம்மாவின் இழப்பு உன் சொற்களால் இன்னும் என்னை அதிகம் உணரவைக்கிறது!!!
நீ இப்பூவுலகில் இல்லை என்பதை என் உள்ளத்திற்கு என்னால் உணரச்செய்ய முடியவில்லை!!!
Mikka Nandri @Aruna
Post a Comment