Wednesday, December 7, 2016

மதிப்பிற்குரிய













கைகொட்டி நகைத்தவர்களும் கைகூப்பி வணங்க,
அவமரியாதை செய்தவர்களும் 'அம்மாஎன்றழ,
நீ வீழ மாட்டாயா என எதிர்நோக்கிய கண்களும்
நேற்று நீ மீண்டெழ மாட்டாயா என ஏங்க,
'ஆணவம்எனும் அடைமொழி இன்று 'இரும்பு மனம்என மாறிட,
வெற்றிடமாய்ப்போனபலர் உணர்ந்திராத நீ இருந்த இடம்
அனைவர் மனதிலும் உறுத்திக்கொண்டிருக்க,

போற்றத்தக்க பரிமாணங்கள்;
அதிரவைக்கும் அச்சமின்மை;
வியப்பூட்டும் நாவன்மை;
எழில்மிகு தனித்தன்மை;
அசைக்கவல்ல அமைவடக்கம் - என
உன்னை பார்த்தபோதெல்லாம் உள்ளூக்கம் பெற்ற நான் -

உதவிய நல்லுள்ளத்தை ஏளனம் செய்து,
இன்று அதையே உயர்த்திப்பேசும் இரட்டை தரங்களையும்,
மறைந்தபின் புகழாரம் சூட்டும் நிலையற்ற மாந்தரையும்
முதல் முறை உற்றுநோக்கியபின் உணர்ந்தேன் -

உன் உறக்கமே அமைதி நிறைந்தது என!

Powered by Blogger.