சலிப்பின்றி சுழன்றோடியும்,
இமைப்பொழுது ஓய்வுமற்றும்,
நாள்தோறும் இயந்திரமாய் இயங்கியும்,
தகிக்கும் உஷ்ணம் தாங்கியும்,
தண்மை தர தாமதம் ஏனோ?
சுற்றம் எங்கும் இரைச்சல் சூழ,
உயிர்கொண்ட மௌனத்தை நாடி,
எதிர்நோக்கிய விழிகள் விரிந்தெரிந்தன!
மெல்ல நகர்ந்த நொடிகள்
மேலும் வெறுமை சேர்க்க,
இமை மூடும் வேளையில் -
இனிமையாய்,
எளிமையாய்,
முழுமையாய்,
நிறைவாய்
எழில்மதி மலர - மகிழ்ந்தது மனம்
சூரியன் அஸ்தமித்தான் - மறுநாள் மதிமுகம் காண!