சான்றோர் அறிய விரும்பும் பன்மொழிகள்(1);
பார்ப்போர் வியக்கும் கலாச்சாரங்கள்;
பார் போற்றும் பண்பாடு;
மனதை மயக்கும் கலை நயங்கள்;
இவ்வனைத்தும் நிறையப் பெற்ற எங்கள் தேசம் -
கண் கவரும் அழகிய தீபகற்பம் -
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட எங்கள் பாரதம்!
இன்று,
இன்று,
இனம் மதம் மொழி(2) என
வேறுபாடுகளே உயர்ந்து நிற்கும் சிதைவு ஏனோ?
பல மனிதர்கள்! பல பிரிவுகள்! பல பெயர்கள்!
இந்தியன் எனும் ஓர் பெயரை ஓங்கி உறைப்பதற்கு நாவில்லாததும் ஏனோ?
"அமைதி பாராட்டும் எங்கள் இந்திய நாடு
பாருக்குள்ளே நல்ல எங்கள் பாரத நாடு"
இன்று உள்ளிருந்து உடைந்து சிதறும் கொடுமை தான் ஏனோ?
மொழி(1) = ஒற்றுமையின் சின்னம்.
மொழி(2) = வேற்றுமைக்கு வித்திட்ட முந்தைய ஒற்றுமையின் சின்னம்.
சிந்தித்து செயலாற்றும் ஒவ்வொரு சிறந்த இந்தியனுக்கும்
எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
*வந்தே மாதரம்*
============
Scholars yearn to master the multifarious languages (1);
Viewers esteem the multiculturalism;
The world regards the integrity;
The mesmerizing artistry;
Endowed with these is our country -
Beautiful captivating peninsula -
Our India ( 'Bharatha Naadu' as Bharathiyar calls it) where unity prevails in diversity!
Today
Why let the dominion of dissimilarities like breed, religion, language (2) falter our harmony?
Varied people! Diverse classification! Numerous names!
Why is the tongue not vociferous when it comes to saying 'I am an Indian'?
"Peace emphasizing country of ours -
Our incredible India"
Is now splitting up from within. Why is this cruelty?
Language (1) - The emblem of unity.
Language (2) - Once the emblem of unity, now the seed for segregation.
My Independence day wishes to every best (sane) Indian citizen.
Vande Mataram (I bow to thee, Mother).