Friday, July 2, 2010

வேண்டாம் நீ எனக்கு - I don't need you


போ!
உடனே போ!

என்னை விடுத்து போ!
வேண்டாம் நீ எனக்கு.
என்னை வருந்தச் செய்கிறாய் நீ-
என்னுள் இருந்து துன்புறுத்துகிறாய்
உலகை மறைத்து நிற்கிறாய்!
வேண்டாம் நீ எனக்கு.
ஏதும் அறியவில்லையா நீ?
என்னை நீ பிரிந்து செல்வதில் தான் இன்பம் எனக்கு
எனினும்..
 நீ என்னை முழுமையாக பிரிவதோ சாத்தியமும் இல்லை!!
வேண்டாம் நீ எனக்கு.
என்னை மீழ இயலாத் துன்பத்தில் ஆற்றுகிறாய்
தாள இயலாத் துயரத்தில் இருந்து மீட்கவும் செய்கிறாய்
துன்பத்தில் நீஇன்பத்திலும் நீ!
எப்பொழுதிலும் என்னுடன் நீ!
என்ன இருப்பினும்,
வேண்டாம் நீ எனக்கு.

~என் 'கண்ணீரை'ப்  பார்த்து அழுது கொண்டே கூறின ..
 என் "கண்கள்"~

I DON'T NEED YOU

Go!
Go now!

Leave me and go!
I don't need you.
You make me suffer-
Distressing me from within
Hiding the world in front of me!
I don't need you.
Don't you just know?
In your departure lies my euphoria!
Yet..
You cannot completely abandon me, Can you?
I don't need you.
You put me through a bit much blues
And save me from the same.
You crop up with my sorrow! Pop up with my joy!
Invariably with me!

Whatever it is,
I don't need you.
~Cried: My 'Eyes' to my 'Tears'~

^-^

Powered by Blogger.